Sunday, February 2, 2014

பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள்

பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களால், ஏற்படும் தீங்குகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி, திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ அலீம் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிப்ஸ் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுவதால் தீங்கு ஏற்படுகிறது என்றும், எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் நோய் வராமல் பாதுகாக்க முடியும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு, விளம்பர பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
source:Sathiyam TV January 8, 2014

No comments:

Post a Comment