Monday, July 8, 2013

திருச்சியில் புது போதை பொருளாளர் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.

மது, கள் என குறைந்த செலவு போதையை குடிமகன் கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற உயர் ரக போதை வஸ்துகளும் உள்ளன. இந்நிலையில் திருச்சியில் புதுவித போதை மோகம் பரவி வருகிறது.
திருச்சியில் பாலக்கரை, காந்திமார்க்கெட், தென் னூர், காஜாப்பேட்டை, இபி ரோடு, காவிரி கரை பகுதிகளில் உள்ள சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் இவ் வகை போதையில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.
செருப்பு தயாரிப்பு மற்றும் பர்னிச்சர்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடை, இரும்பு சாமான்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும் சொல்யூஷனே இந்த போதை பொருளா கும். 50 மில்லி முதல் 5 லிட்டர் மற்றும் கேன்களில் கிடைக்கிறது. மேலும் சைக்கிளிலுக்கு பஞ்சருக்கு ஒட்டப்படும் சொல் யூஷன் விலையும் மிக குறைவேயா கும். இவற்றை வாங்கும் போதை ஆசாமி கள் அவற்றின் மூடியை திறந்து மூக்கின் அருகே கொண்டு சென்று சொல்யூஷனின் வாசனையை உறிஞ்சுகின்றனர். அவர்கள் உறுஞ்சும் வேகத்தில் இவற்றில் உள்ள கெமிக்கல் மூளை வரைக் கும் �சுர்� என்று செல்கிறது. அப்போது ஏற்படும் ரசாயான மாற்றம் சிறிது நேரம் அவர்களை தன் னிலை மறக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.
அதன்பின் டப்பாவில் உள்ள சொல்யூஷனில் காற்று பட்டு அவை இறுகும் தன் மைக்கு செல்லும் போது அவற்றை கைகளினால் எடுத்து உருட்டி வைத்துக்கொண்டு அடிக்கடி உறிஞ்சி போதையை இறங்க விடாமல் பார்த்துக்கொள்கின்றனர். அதே போல் பஞ்சருக்கு ஒட்டப்படும் சொல்யூஷனை நீரில் கலந்து அவற்றை சூடுபடுத்தி அதன் ஆவியை பிடிக்கும் போது போதை ஏற்படுகிறது.
இதே போல் ஒயிட்னர், நெய்ல் பாலிஷ் ஆகியவற்றிலும் போதையை கண்டுபிடித்து இன்பம் அனுபவித்து வருகின்றனர். இவ ற்றில் ஒயிட்னரை துணி மற்றும் கர்சீப்பில் கலந்து வைத்து கொண்டு சுவாசி த்து போதை ஏற்படுத்தி கொள்கின்றனர்.
சொல்யூஷன் அரை லிட்டர் டப்பாவின் விலை ரூ.85. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படும் சொல்யூஷன் விலை ரூ.10. குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இந்த புதுவித போதை பொருள் இளைஞர்கள் மட்டுமின்றி நடுத் தர வர்க்கத்தினர், முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடத்திலும் பரவி வருகிறது. காவிரி கரை ஓரமான ஓயாமாரி சுடுகாட்டு பாலம், அய்யாலம்மன் படித்துறை பகுதியில் ஏராளமானோர் அமர்ந்து இந்த போதையை அனுபவிக்கின்றனர்.
இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அலீம் கூறுகையில், கெமிக்கல் கல ந்த சொல்யூஷன், ஒயிட்னர், நெய்ல் பாலிஷ் ஆகியவற்றை சுவாசிப்பதால் மூளையை பாதிப்படைய செய்கிறது. மூளையை தாக்கிய பின்னர் ரத்தத்தில் கிருமிகள் கலப்பதால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தொடர்ந்து உபயோகித் தால் மூச்சுதிணறல், நுரை யீரல் பாதிப்பு, மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் கை, கால் செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.
பெற்றோருக்கு தெரியா மல் இம்மாதிரியான போதைக்கு அடிமையாகும் மாணவ, மாணவிகள் மற் றும் வாலிபர்களை அடை யாளம் கொள்வது சுலபமா கும். இவர்களுக்கு வாய் மற்றும் மூக்கை சுற்றிலும் சிவப்பு நிறம் தோன்றும். கால்களில் புண் ஏற்படும். அடிக்கடி இருமல், சளி தொல்லை ஏற்படும். இவர் கள் கோபமாக பேசுவர். முன்னுக்கு பின் முரணாக பேசுவது போன்றவைகளை கொண்டு கண்டுபிடித்து விடலாம். இம்மாதிரியான அடையாளங்கள் தெரிந் தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தகுந்த கவுன்சிலிங் அளித்து அவர்களை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். இம்மாதிரியான போதை பழக்கங்கள் வட மாநிலங்களில் அதிகமாக இருந்து, தற்போது திருச்சியில் பரவி வருவது வேதனைக்குரிய என்றார்.
பரவுகிறது புது போதை மோகம்
டாக்டர் அலீம்

No comments:

Post a Comment