Sunday, November 6, 2011

ரத்த தான சிறப்பு முகாம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்று

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011,23:48 IST
திருச்சி: திருச்சி காந்தி நினைவு அரசு மருத்துவமனை கூட்டரங்கில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசிய தன்னார்வ ரத்த தானம் தினத்தையொட்டி, ரத்த தானம் முகாம்களை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். அவரே ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். பின் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் முதல் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து, சமூக சேவை புரிந்த ஒருங்கிணைப்பாளர்களின் உன்னதமான பணிகளை பாராட்டி கேடயம், பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. தான்ததில் சிறந்தது ரத்ததானம். ரத்தம் இதுவரை மருத்துவ ரீதியாக தயாரிக்கப்படவில்லை. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ரத்தம் வழங்கி அவரது உயிரை காப்பாற்றும் உன்னதமான செயல் ரத்த தானம். இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் கனகசுந்தரம், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மோகனசுந்தரம், மாவட்ட திட்ட மேலாளர் காளிராஜன், மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் அலீம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பத்மநாபன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment