Sunday, November 7, 2010

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் முகாம் தொடக்கம்

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் முகாம் தொடக்கம்

First Published : 07 Nov 2010 01:06:02 PM IST
Last Updated :


திருச்சி, நவ. 6: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இந்நிலையில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு முகாமை தொடக்கி வைத்தார். தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

முகாம் தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.அ. ராமன், சட்டப் பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், மருத்துவக் கல்லூரி முதன்மையர் அ. கார்த்திகேயன், துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தினமணி
Sunday, November 07, 2010 2:12 PM IST

No comments:

Post a Comment