Sunday, October 17, 2010

ரத்தம் உறையாமை நோய்க்கு தனிப்பிரிவு திருச்சி அரசு மருத்துவமனையில் துவக்கம்

Dinamalar - No 1 Tamil News Paper


ரத்தம் உறையாமை நோய்க்கு தனிப்பிரிவு திருச்சி அரசு மருத்துவமனையில் துவக்கம்
பதிவு செய்த நாள் : அக்டோபர் 15,2010,03:53 IST
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த உறையாமை நோய் சிகிச்சைக்கான புதிய பிரிவு துவக்கப்பட்டது.திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு ரத்த உறையாமை நோய்க்கு (ஹீமோபிலியா) சிகிச்சை அளிக்கக்கூடிய பிரிவு இல்லாமல் இருந்தது. இதனால் அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனையை நாடவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.இதையடுத்து திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்த உறையாமை நோய்க்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு துவக்க டீன் கார்த்திகேயன் முயற்சி மேற்கொண்டார்.
அதன்பலனாக நேற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்த உறையாமை நோய்க்காக சிறப்பு சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் காலை துவக்கப்பட்டது. புதிய மருத்துவப்பிரிவை டாக்டர் குணசேகரன் துவக்கிவைத்தார்.ரத்த உறையாமை நோய் சிகிச்சை பிரிவு துவக்க விழாவில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் குணசேகரன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் அலீம், டாக்டர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழாவில் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ""புறநோயாளிகள் பயன்பெறும் வகையில் ரத்த உறையாமை நோய் சிகிச்சைக்காக துவக்கப்பட்டுள்ள புதிய பிரிவு புதன் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். இந்த பிரிவை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். புதிய பிரிவுக்கு தேவையான டாக்டர்களும், மருத்துவ வசதிகளும் விரைவில் கிடைக்கும்,'' என்று பேசினார்.

அரசு மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் அலீம் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ரத்த உறையாமை நோய்க்கான சிகிச்சை பிரிவு துவக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டதால் புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ரத்த உறையாமை நோயால் லட்சத்தில் ஒருவர் பாதிக்கப்படுகிறார். இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரம்பரை காரணமாகவும், வைட்டமின் சத்து குறைபாடு காரணமாகவும் ரத்த உறையாமை நோய் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment