Sunday, October 17, 2010

அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக அலீம் பொறுப்பேற்பு

  
01 Mar 2010 05:09:51 AM IST

அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக அலீம் பொறுப்பேற்பு 

திருச்சி பிப். 28: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக டாக்டர் எம்.ஏ. அலீம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராக இருந்த கார்த்திகேயன் பதவி உயர்வு பெற்று, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, துணை முதல்வராக நியமிக்கப்பட்ட கல்லூரியின் மூளை நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு, கல்லூரி முதல்வர் என். பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment